கல்தோன்றி மண்தோன்றா காலத்தே வாளோடு முன் தோன்றிய மூத்த மொழி நம் தமிழ் மொழி. இத்தகைய மொழி காலத்திற்கு ஏற்ப பல மாற்றங்களைத் தமக்குள் பெற்று வருகிறது. நாம் எண்ணியவற்றை திண்ணமாகப் பிறருக்குப் புரிய வைக்க பயன்படுகிற ஒரே மொழி நம் தமிழ் மொழி.இறைவன் எல்லா இடங்களிலும் இருப்பான் என்பது ஆன்றோர் கூற்று அதனைப் போலவே நம்முடைய மொழியும் எல்லா இடங்களிலும் வளர்ந்து வருகிறது. அத்தகைய வளர்ச்சியின் ஒரு பங்காக எங்கள் KGISL தொழில்நுட்பக் கல்லூரியில் 2014 ஆம் ஆண்டில் தமிழ் மன்றம் துவங்கப்பட்டது. ஒரு சிறிய புள்ளியிலிருந்து பெரிய கோடுகள் வரையப்படுவதைப் போல இம்மன்றமும் மொழியினை உலகறியச் செய்ய உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.அத்தகைய வளர்ச்சிக்கு நம் கல்விக் குழுமம் என்றென்றும் உறுதுணையாக இருப்பது திண்ணமே.